வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 22 செப்டம்பர் 2018 (15:20 IST)

கட்டிய கணவருக்கு கல்தா கொடுத்த புதுப்பெண்

சென்னை தொண்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் ஜெயின் (45). இவர் அடகு கடையை நடத்தி வருகிறார்.








இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் திருமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளார். இந்நிலையில் கொடுங்கையூரைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் புரோக்கர் ஜெயினுக்கு புனாவைச் ( புனா மாநிலம்) சேர்ந்த அழகான பெண்ணை பார்த்து தருவதாகவும் அதற்கு ரூ.2லட்சத்து ஐம்பதாயிரம் கமிஷனாக தரும்படி கூறியிக்கிறார்.

உடனே அதற்கு சம்மதம் தெரிவித்த ஜெயின் முன்பணமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை பெண் புரோக்கரிடம் கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை பெற்றுக் கொண்ட  புரோக்கர் லட்சுமி, ஜெயஸ்ரீ என்ற பெண்ணை கடந்த மாதம் குமாரகோட்டம் கோவிலில் வைத்து ஜெயினுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் முடிந்தும் கூட பெண்புரோக்கரும் புதுப்பெண்ணும் அடிக்கடி தொடர்பு கொண்டு பழகி வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 20 ம்தேதி புதுப்பெண்ணை அழைத்துக் கொண்டு புரோக்கர் புனேவுக்கு சென்றதாக தெரிகிறது.

திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே புதுப்பெண் வீட்டை விட்டு ஓடிப்போகும் போது பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றதாக அவரது கணவர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.

ஏற்கனவே புதுப்பெண் புரோக்கருடன் பழக்கம் கொண்டிருந்தாரா அல்லது இதுபோன்று திருமணம் என்னும் பெயரில் நாடகமாடி வசதியானவர்களை வலையில் வீழ்த்தி பணத்தைக் கொள்ளையடிக்கும்  கும்பலா என்ற கோணத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அழகான பெண்ணை எதிர்பார்த்த முதிர்மாப்பிள்ளை ஜெயின், அந்த பெண்ணின் பின்புலம் பற்றி கொஞ்சம் விசாரித்து இருந்தால் இன்று இந்நிலைக்கு ஆளாகி இருக்க வாய்ப்பில்லை.

இனிமேலாவது திருமணம் செய்து கொள்ளும் முன்பு மாப்பிள்ளை பெண்வீட்டார் பற்றிய பின்புலன் குடும்ப விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு செய்தால் இதுபோன்ற பின் விளைவுகள் வருவதற்கு வாய்ப்பில்லை.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நமது முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இனியாவது விழித்துக் கொள்வோம்.