திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 22 செப்டம்பர் 2018 (13:22 IST)

வெளிநாட்டு மணல் விற்பனை - முன்பதிவு தொடங்கியது

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருக்கும் மணல் விற்பனைக்கான முன்பதிவை அரசு நேற்று அறிவித்துள்ளது.


 

’தமிழ்நாட்டில் தற்போது கட்டிடங்கள் கட்டுவதற்கு மணலுக்கு பதிலாக எம் சாண்ட் மணலையும் பலர் உபயோகப் படுத்த ஆரம்பித்துள்ளனர். இருந்தாலும் மணலை முழுவதுமாக நாம் கட்டிட பயன்பாட்டில் இருந்து விலக்கி விட முடியாது. அதிகரிக்கும் மணல் தேவையைக் கணக்கில் கொண்டு வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் அதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளதாகவும்’ முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

மேலும் இவ்வாறு வெளிநாடுகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் மணலை தமிழகத்திற்குள் விற்கும் உரிமை பொதுப்பணித்துறைக்கு மட்டுமே உண்டு என்றும் அதை மீறுவோர் மீது ஐந்து லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் தமிழக அரசு, பொதுப்பணித் துறை இணயதளத்தில் நேற்று (செப்-21) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மணல் விற்பனைக்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணி முதல் ஆரம்பமாகிறது என்று அறிவித்துள்ளது. மேலும் அடுத்த வாரம் முதல் மணல் விநியோகம் நடைபெறும் எனவும் முதல் கட்டமாக 11 ஆயிரம் யூனிட் மணல் விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஆகையால் முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஒரு யூனிட்(4.5 டன்) மணலின் விலை ரூ 9,990 எனவும் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஐந்து யூனிட் மணல் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.