1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2017 (17:41 IST)

இரட்டை இலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு:

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்பது குறித்த விசாரணை கடந்த சில வாரமாக தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரமே இந்த விசாரணை முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


 


ஆனால் இந்த வழக்கு நவம்பர் 6ஆம் தேதிக்கு அதாவது இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மதியம் மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக இன்றைய விசாரணையில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் மற்றும் டிடிவி தரப்பு வாதங்களை தேர்தல் ஆணையம் கேட்டது. மேலும் இரட்டை இலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேலும் அவகாசம் கேட்பது குறித்து ஆணையம் ஆலோசனை கேட்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.