டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிந்தனை துளிகள்

Sasikala|
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

 
* ஒருமுறை வந்தால் அது கனவு. இருமுறை வந்தால் அது ஆசை. பலமுறை வந்தால் அது லட்சியம்.
 
நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புக்காக காத்திராதே வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்.
 
துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை.
 
வெல்வோம், சாதிப்போம், வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும்.
 
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
 
கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னை தூங்கவிடாமல் செய்வதே.
 
ஒரு மனுஷன் பிரியும்போது அவன் தாய் அழுதா அவன் ஒரு நல்ல மகன், அவன் பிள்ளை அழுதா அவன் ஒரு நல்ல தகப்பன்,  அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதா அவன் ஒரு நல்ல தலைவன்.
 
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்இதில் மேலும் படிக்கவும் :