1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 6 நவம்பர் 2017 (14:53 IST)

ஏரி குளங்களுக்கு பதில் அரசு கஜானாவை தூர்வாரி விட்டனர்; தினகரன் குற்றச்சாட்டு

எடப்பாடி தலைமையிலான அரசு ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு பதில் அரசு கஜானாவை தூர்வாரி விட்டனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.


 

 
வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது. தண்ணீர் தேங்கிய 200 இடங்களில் நேற்று தண்ணீர் அகற்றப்பட்டது. 
 
வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அதை சுற்றியுள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் டிடிவி தினகரன், எடப்பாடி தலைமையிலான அரசு ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு பதில் அரசு கஜானாவை தூர்வாரி விட்டனர் என குற்றம்சாட்டியுள்ளார்.
 
தருமபுரியில் எம்.இ.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா பொது கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:-
 
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவர். இதையடுத்து எங்கள் அணி தலைமையில் புதிய ஆட்சி அமையும். இதற்காக புதிதாக வாக்காளர்களாக சேர்ந்துள்ள 50 லட்சம் இளைஞர்கள் எங்களுக்கு துணை நிற்பார்கள். 
 
எடப்பாடி தலைமையிலான அரசு ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு பதில் அரசு கஜானாவை தூர்வாரி விட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.