வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2021 (11:28 IST)

வேட்புமனு கொடுத்தவர்களுக்கு மார்ச் 2ம் தேதி நேர்காணல்: ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பு!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கூட்டணி கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன
 
ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் உள்பட ஒருசில கட்சிகள் விருப்ப மனு கொடுக்கலாம் என்றும் அறிவித்திருந்தது, இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் திமுக அலுவலகத்தில் விருப்ப மனு கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திமுக வேட்பாளர்களின் நேர்காணலுக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அவர்கள் இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு மார்ச் 2-ஆம் தேதி நேர்காணல் என்று அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து திமுக சுறுசுறுப்பாக தேர்தலுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது