செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:33 IST)

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு… முன் கூட்டியே நடக்குமா தேர்தல்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன் கூட்டியே நடக்கலாம் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இப்போது 10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான பொதுத் தேர்வு மே 3 ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலமும் மே மாதத்தோடு முடிய உள்ள நிலையில் மே மாதம் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது ஏப்ரல் மாதமே நடக்கலாம் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி இன்று தமிழக தேர்தல் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துகிறார்.