செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (10:54 IST)

இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்! – சூடு பிடிக்கும் தேர்தல்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மறுபுறம் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக 2 இணை தலைமை தேர்தல் ஆணையர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. சுகாதாரத்துறை கூடுதல் செயலர் அஜய் யாதவ் மற்றும் வேளாண் துறை இணை செயலாளராக இருந்த ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.