வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (16:15 IST)

50 எம்எல்ஏக்களை சுளையாக அள்ளிய தினகரன்: உளவுத்துறை அறிக்கையால் தடுமாறும் டெல்லி தரப்பு!

50 எம்எல்ஏக்களை சுளையாக அள்ளிய தினகரன்: உளவுத்துறை அறிக்கையால் தடுமாறும் டெல்லி தரப்பு!

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர். தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் 20 பேர் தான் இருப்பார்கள் என நினைத்த டெல்லி தரப்புக்கு உளவுத்துறையின் அறிக்கை ஒன்று அதிர்ச்சியை அளித்துள்ளது.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுகவை மறைமுகமாக இயக்கு வருகிறது பாஜக என்பது அனைவரும் வைக்கும் குற்றச்சாட்டு. தொடக்கத்தில் இருந்தே சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து ஒதுக்க முயற்சிகளை செய்து வருகிறது பாஜக.
 
தற்போது எடப்பாடி அணியையும் ஓபிஎஸ் அணியையும் இணைத்து அதிமுகவை சுமூகமாக இயக்கலாம் என திட்டமிட்ட பாஜகவுக்கு தினகரனின் விஸ்வரூபம் சிறிய தலைவலியாகவே இருந்தது. அந்த தலைவலி தற்போது தலையை காலி செய்யும் வலியாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த உள்ளது பாஜக.
 
தினகரன் அணியில் அதிகபட்சம் 20 எம்எல்ஏக்கள் தான் வரும் என பாஜக நினைத்து ஆனால் உளவுத்துறை அறிக்கைப்படி தினகரன் அணியில் குறைந்தபட்சம் 50 எம்எல்ஏக்கள் சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசிகளாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது பாஜக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உளவுத்துறையின் இந்த அறிக்கை பாஜக தரப்புக்கு அதிர்ச்சியை விட தடுமாற்றத்தை தான் கொடுத்துள்ளது. தினகரன் தரப்புக்கு இவ்வளவு ஆதரவு இருக்கும் என நினைத்திருந்தால் பாஜக தரப்பு வேறு மாதிரி வியூகம் வகுத்திருக்கும் என கூறப்படுகிறது. அதானல் தான் தற்போது பாஜக தரப்பு தினகரன் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி எடப்பாடி அணியுடன் இணைத்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.