1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (16:01 IST)

நீட் தேர்வு எதிரொலி: 12 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவி தற்கொலை!!

தமிழக அரசின் மாநில 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதா 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்தார். இவரது மருந்துவ கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7 ஆகும்.
 
இந்நிலையில், மத்திய அரசு நீட் தேவு மூலம் மருத்துவ படிப்பிற்கான சீட் வழங்கப்படும் என அறிவித்தது. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட் ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே.
 
பின்னர், நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அனிதா. இவ்வாறு இருக்கையில், இன்று அனிதா தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 
 
மருத்துவ படிப்பிற்காக சீட் கிடைக்காமல் போனதால் மன உலைச்சலில் அனிதா தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.