வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (11:18 IST)

கொரோனாவில் தப்பி நுரையீரல் பிரச்சினையில் சிக்கிய இந்தியர்கள்? – அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!

உலகம் முழுவதும் கோர தாண்டவமாடிய கொரோனா வைரஸால் இந்தியாவில் பலர் நுரையீரல் அழற்சி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி ஏராளமான உயிர்களை பலி கொண்டது. கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில் கொரோனா எண்ணிக்கை குறைந்து இயல்பு நிலை திரும்பியது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வைரஸின் தாக்கத்திலிருந்து மீண்டிருந்தாலும் பல பக்க விளைவுகளை சந்திக்க நேர்ந்துள்ளதாக உலகளாவிய பல மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரி கொரோனா பாதிப்புகள் குறித்த ஆய்வை மேற்கொண்டதில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாட்டில் உள்ள மக்களை விட இந்தியர்களுக்கு அதிகமான அளவில் நுரையீரல் குறைபாடுகள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.


இந்த நுரையீரல் பாதிப்புகள் ஒரு சிலருக்கு ஓராண்டு வரையில் சிலருக்கு அதிகபட்சமாக வாழ்நாள் முழுவதுமே தொடர்ந்து நீடிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து தப்பினாலும் பல்வேறு பக்க விளைவுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K