பாகிஸ்தானின் மொத்த உற்பத்தியை விட டாடா உற்பத்தி அதிகம்: ஆச்சரிய தகவல்..!
பாகிஸ்தான் நாட்டின் மொத்த உற்பத்தியை விட இந்தியாவில் உள்ள டாடா நிறுவனத்தின் ஒரே ஒரு நிறுவனத்தின் உற்பத்தி அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது
டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் என்ற தகவலை IMF சற்றுமுன் தெரிவித்துள்ளது. இந்த தகவலில் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 28.30 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், டாடா நிறுவனங்களின் சந்தை மூலதனம் 30.30 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக IMF கூறியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் உள்நாட்டு குழப்பங்கள், அரசியல் குழப்பங்கள் மற்றும் வறுமை காரணமாக அந்நாட்டில் உற்பத்தி உள்பட பல்வேறு துறைகள் நசிந்து வருகிறது
இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் டாடா நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தனது உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா நிறுவனத்தின் ஒரே ஒரு இந்திய நிறுவனத்தின் உற்பத்தியை விட குறைவாக ஒட்டுமொத்த பாகிஸ்தானின் உற்பத்தி உள்ளது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva