1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (08:00 IST)

டெஸ்ட் போட்டியில் கலக்கிய சர்பராஸ் கான்… ஐபிஎல் தொடரில் வாய்ப்புக் கிடைக்குமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி  ராஜ்கோட்டில் நடந்து முடிந்த நிலையில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் அறிமுகமான இளம் வீரர் சர்பராஸ் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் அரைசதம் அடித்தார். இதன் மூலம் அறிமுகப் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய  வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சர்பராஸ் கான். இதன் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரிலும் மீண்டும் அவருக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னரே ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்காக விளையாடி இருந்தாலும், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மினி ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இப்போது டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளதன் மூலம் அவரை எதாவது ஒரு அணி வாங்கி விளையாட வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.