1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:25 IST)

தலிபான்களின் அரசை இந்தியா ஏற்கிறதா? மத்திய அரசு பதில்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் விரைவில் அரசை அமைக்க உள்ளனர். அதை இந்தியா அங்கிகரிக்கிறதா என்ற கேள்வியை ஊடகங்கள் மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி சென்றார். அமெரிக்க கூட்டுப்படைகள் முழுமையாக ஆப்கனை விட்டு வெளியேறி விட்டனர். இந்நிலையில் விரைவில் தாலிபான்களின் ஆட்சி ஆப்கானிஸ்தானில் அமைய உள்ளது. இதை கனடா உள்ளிட்ட நாடுகள் தலிபான்களை ஏற்கமாட்டோம் என அறிவித்து விட்டனர்.

இந்நிலையில் இந்தியா சில நாட்களுக்கு முன்னர் தலிபான்களின் பிரதிநிதியோடு பேச்சுவார்த்தை நடத்தியது. இது சம்மந்தமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஆரிந்தம் பக்சியிடம் இந்தியா தாலிபான்களை ஆதரிக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் ‘தலிபான்களை மத்திய அரசு ஆதரிக்கிறதா என்பதை இப்போது சொல்லமுடியாது. தோஹாவில் நாங்கள் தலிபான்களுடன் ஒரு சந்திப்பு நடத்தியிருக்கிறோம் அவ்வளவுதான. தாலிபான்களின் ஆட்சிக்குப் பின்னர் இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடக்கக் கூடாது என்பதில்தான் நாங்கள் கவனமாக இருக்கிறோம். தாலிபான்கள் ஆட்சி அமைப்பது சம்மந்தமாக மத்திய அரசுக்கு எந்த தகவலும் வரவில்லை’ எனக் கூறியுள்ளார்.