ரொம்ப பேர் படிச்சதனாலதான் வேலை கிடைக்கவில்லை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
மக்களிடையே படிப்பு அதிகமாகிவிட்டது என்றும், அதிகம் பேர் படிப்பதால்தான் வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்
திண்டுக்கல் அருகே மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: முன்பெல்லாம் பத்தாம் வகுப்பு படித்திருந்தாலே பெரிய படிப்பு என்று கூறுவார்கள். ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் கல்வி அறிவு அதிகமாகி விட்டது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்னும் 1 லட்சம் இடம் காலியாக உள்ளது. அந்த அளவுக்கு மக்கள் படித்ததால் தான் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் என் மகள் இன்ஜினியர், மகன் இன்ஜினியர் படிப்பு முடித்து உள்ளனர் என்று சொல்லி வருகின்றனர்.
எனவே படித்த பிள்ளைகளுக்கு உடனே வேலை வேண்டும் என்றால் டி.என்.பி.எஸ்.சி தேர்வை எழுத தயாராக வேண்டும். அதில் தேர்வு எழுதி பாஸ் ஆகிவிட்டால் யாருடைய தயவும் தேவை இல்லை, 1 பைசா லஞ்சம் கொடுக்காமல் பெற்ற அறிவின் மூலம் வேலை உங்கள் வீடு தேடி வரும் என்று பேசினார்.