தொடர்புடைய செய்திகள்
- மத்தியில் பாஜகவுக்கு ஜால்ரா… மாநிலத்தில் பாஜக எதிர்ப்பு – பொங்கிய அதிமுக அமைச்சர்
- அமித்ஷா சிபாரிசு... ஆட்சியும் கட்சியும் ஓபிஎஸ் கைக்கு மாற்றம்?
- காஷ்மீரின் உண்மை நிலை என்ன? வைரலாகும் புகைப்படம் உண்மையா??
- பாஜக மாநில தலைவர் தேர்தல்: தமிழிசை மாற்றப்படுவாரா?
- அதிமுக தோல்விக்கு பாஜக காரணமா? விளக்கிய தமிழிசை!
இது தான் உங்கள் கல்வி கொள்கையா?? தலித் விடுதலை இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
கரூரில் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து தலித் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கையை எதிர்த்து., கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.கருப்பையா தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் 5 ஆம் வகுப்பிற்கு மேல் பெயிலானால் திறன் மேம்பாட்டு பயிற்சி அதாவது, செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கலாம், விவசாயி மகன் ஏர் ஊழலாம் என்பது தான் புதிய கல்விக் கொள்கையா? என்று முழக்கங்கள் எழுப்பட்டது.
பேட்டி : ச.கருப்பையா – மாநில பொதுச்செயலாளர் – தலித் விடுதலை இயக்கம்
