திருப்பத்தூரில் திடீரென ரெய்டு செய்த ஐடி அதிகாரிகள்.. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் என தகவல்..!
தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் திருப்பத்தூரில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிவந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூரில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தான் இன்று காலை திருப்பத்தூரில் உள்ள பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக நவீன் என்பவர் வீட்டில் நடந்த சோதனையில் 40 லட்சம் பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இருப்பினும் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வருமானவரித்துறை அதிகாரிகள் அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
ஏற்கனவே சென்னையில் ஓட்டேரி உள்ளிட்ட ஐந்து இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அங்கும் பல லட்சம் மதிப்புள்ளான பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் வருமானவரித்துறை அதிகாரிகளின் கெடுபிடி அதிகம் ஆகும் என்று கூறப்படுவதால் அரசியல் கட்சிகள் கவலையில் உள்ளன.
Edited by Siva