1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 30 மார்ச் 2024 (15:46 IST)

திமுகவுக்கு ஆதரவா..? பெண் அதிகாரி சஸ்பெண்ட்..! எதற்காக தெரியுமா..?

A Raja
தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவின் காரை முறையாக சோதனை மேற்கொள்ளவில்லை என்ற புகாரில் பெண் தேர்தல் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  நீலகிரி  தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கீதா மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவின் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் முறையாக சோதனை மேற்கொள்ளவில்லை என்று புகார் எழுந்தது.

 
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் முறையாக வாகன பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் கீதாவை இன்று முதல் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.