திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 28 அக்டோபர் 2020 (15:50 IST)

’’ஏன் கட்சி தொடங்கவில்லை???’’ ரஜினி தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்...இணையதளத்தில் வைரல்

வரும் 2021 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் அத்துணை கட்சிகளில் வெற்றி பெற வேண்டுமென முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டுள்ளன.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை அறிவித்துவிட்டாலும் கூட அவர் இன்னும் தனது அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தவில்லை என்ற குறை அவரது ரஜினி மக்கள் மன்றத்தினரிடையே உள்ளது.

இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு 7 மாதங்களே உள்ள நிலையில் ரஜினி கட்சி தொடங்குவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், ரஜினி தனது ரசிகர்களுக்கு எழுதியதாக ஒரு கடிதம் எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தக் கடிதத்தில், என்னை வாழ வைத்த தெய்வங்களான என் அன்புக்குரிய என் ரசிகர்களும்ம் மக்களும்தான் எனக்குக் கடவுள். அதனால் அவர்களிடம் எல்லா உண்மைகளையும் நான் சொல்லுவேன்.

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உண்டாக வேண்டுமென  இந்த ஆண்டு மார்ச், மே, ஜுன்,ஜூலை மாதங்களில் அனைத்து மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பின், அக்டோபர் 2 ஆம் தேதி மதுரையில் ஒரு மாநாட்டு நடத்தி கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் கொரோனாவால் அது முடியவில்லை.

எனது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் அறிவுறுத்தியதாலும் என்னால்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை. எனக்கு உயிர் மீது பயமில்லை; என்னை நம்பி வருவோர்களின் நலன்  பற்றியதான் கவலை.

கடைசியில் மக்களும் என்னை என்ன முடிவு எடுக்கச் சொன்னாலும் அதை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்..மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. வாழ்க தமிழ் மக்கள், வளர்க்க தமிழ்நாடு. ஜெய்சேகர்!! அன்புடன் ரஜினிகாந்த் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தக் கடிதம் குறித்து ரஜினி தர்ப்பில் எந்த உறுதிப்பூர்வமான தகவலும் வெளியிடவில்லை.