1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy Rain Expected Today in 14 Districts Including Krishnagiri

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Rain
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, இடி, மின்னலுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
 
இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால்.
 
அதே போல் நாளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது.
 
மே 19, 20, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடைவிடா மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சென்னையில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம். வெப்பநிலை அதிகபட்சமாக 36–37°C வரை, குறைந்தபட்சமாக 27°C இருக்கும்.
 
மே 17 முதல் 21 வரை தமிழகத்தில் வெப்பநிலை 2–3°C வரை குறையக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran
About Writer
Mahendran