திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 நவம்பர் 2023 (17:58 IST)

திருச்சி தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டு.. அமைச்சர் எ.வ.வேலு ரெய்டுக்கு சம்பந்தமா?

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கடந்த நான்கு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில் தற்போது திடீரென திருச்சியில் உள்ள தொழிலதிபர் வீட்டில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சி அண்ணா நகர் கண்ணதாசன் சாலையில் உள்ள சாமிநாதன் என்ற தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சோதனைக்கு பின்னர் சாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை வருமானவரித்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 
 
லட்சுமி காபித்தூள் ஏஜென்சி வைத்துள்ள சாமிநாதன் பைனான்சியர் என்றும் கூறப்படுகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு மற்றும் அவரது உறவினர் வீட்டில் நடந்த ரெய்டுக்கும், திருச்சி தொழிலாளர் வீட்டில் ரெய்டுக்கும் தொடர்பு இருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. .
 
Edited by Siva