செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (11:31 IST)

சென்னை காசா கிராண்ட் நிறுவனத்தில் ஐடி ரெய்டு.. ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுப்பு..!

சென்னை காசா கிராண்ட் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்து வருவதை அடுத்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

சென்னை திருவான்மியூரில் காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
 
காசா கிராண்ட் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலக, நிர்வாகிகள் வீடு என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

மேலும் திருவான்மியூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு முக்கிய நிர்வாகிகளை அழைத்து வந்து விசாரணை செய்யப்படுவதாகவும், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள், விற்பனை குறித்து விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் காசா கிராண்ட் ஊழியர்கள், காவலாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பணியாளர்கள் வெளியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran