வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 4 நவம்பர் 2023 (12:44 IST)

அபிராமி ராமநாதன் வீட்டில் வரித்துறை அதிகாரிகள் சோதனை.. நகைகள் சிக்கியுள்ளதா?

பிரபல தொழிலதிபர் அபிராமி ராமநாதனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை செய்த நிலையில் தற்போது அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
 
அபிராமி ராமநாதன் கட்டிவரும் வணிக வளாகத்தின் கட்டுமான ஒப்பந்தத்தை அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று முதல் அந்நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்து வருகின்றது.
 
இந்த நிலையில் இன்று அபிராமி ராமநாதன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் அபிராமி ராமநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத நகைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
நேற்று மாலை 4 மணி முதல் கஸ்தூரி எஸ்டேட்டில் உள்ள அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் சோதனை நடந்து வருவதால் சென்னை தியேட்டர் அதிபர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran