பொள்ளாச்சியில் 4 இடங்களில் வருமான வரி சோதனை: ரூ.32 கோடி பறிமுதல் என தகவல்..!
பொள்ளாச்சியில் நான்கு இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் இதுவரை ரூ.32 கோடி வரை முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தீவிர பரிசோதனை செய்து வரும் நிலையில் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் வருமான வரித்துறையினர் அதிரடியாக களத்தில் இறங்கி உள்ள நிலையில் கோவையை அடுத்து பொள்ளாச்சி அருகே உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்களின் வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த கோழி பண்ணைகளில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சோதனை நடைபெற்று வருவதாகவும் இந்த சோதனையில் இதுவரை கணக்கில் வராத 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது
இந்த பணம் குறித்து வருமான வரித்துறையினர் கோழிப்பண்ணை உரிமையாளர் இடம் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சோதனை செய்து வரும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran