திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (11:05 IST)

2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத செந்தில் பாலாஜி சகோதரர்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Senthil Balaji
அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய சகோதரர் விசாரணைக்கு ஆஜராக இரண்டு முறை சமன் அனுப்பிய போதிலும் அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுவதால் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வருமான வரி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் இதுவரை ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. 
 
கடந்த மே மாதம் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்தது என்பதும் இதனை அடுத்து ஜூன் 7ஆம் தேதி நேரடியாக ஆஜராக வேண்டும் என வருமானவரி துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் வருமானவரித்துறை சம்மனுக்கு செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் இதுவரை ஆஜராகவில்லை என்று தகவல் வெளியானதை அடுத்து வருமானவரித்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran