ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 31 மே 2023 (07:44 IST)

5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை: அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரருக்கு நோட்டீஸ்..!

ஐந்தாவது நாளாக கரூரில் வருமானவரி சோதனை தொடர்ந்து வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என வருமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 மே 26 ஆம் தேதி முதல், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை என சோதனை செய்து வருகின்றனர். 
 
குறிப்பாக கரூரில் உள்ள செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அசோக் குமார் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva