திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 மே 2023 (11:13 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டி கொண்டிருக்கும் புதிய வீட்டில் சோதனையா?

அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டி கொண்டிருப்பதாக கூறப்படும் புதிய வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை செய்து வருவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கரூர் அருகே அமைச்சர் செந்தில் பாலாஜி 300 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடு கட்டிக் கொண்டிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இது குறித்த புகைப்படங்களுடன் கூடிய பதிவை தனது டிவிட்டரில் பதிவு செய்திருந்தார். 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி கட்டிக் கொண்டிருப்பதாக கூறப்படும் புதிய வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று விடிய விடிய சோதனை செய்ததாக கூறப்படுகிறது. 
 
ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பள்ளி கற்கள் மற்றும் விலை உயர்ந்த உபகரணங்கள் அந்த வீட்டில் இருப்பதால் அது குறித்த மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran