வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 மே 2023 (16:13 IST)

ஸ்டாலின் பதவி பறிபோனால் வியப்பதற்கில்லை: சவுக்கு சங்கர் ட்விட்..!

Savuku Sankar
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பதவி பறிபோனால் வியப்பதற்கு இல்லை என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
சவுக்கு சங்கர் ஏற்கனவே பல பேட்டிகளில் திமுகவுக்கு சாவு மணி அடிப்பது செந்தில் பாலாஜி தான் என்றும் செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் தான் பெரும்பாலான திமுக எம்எல்ஏக்கள் உள்ளனர் என்றும் கூறியுள்ளார். 
 
அதுமட்டுமின்றி ஆட்சி அதிகாரம், அதிகாரிகள், காவல்துறை அனைத்துமே செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும் அவர் கூறி வருகிறார். 
 
இந்த நிலையில் தற்போது ஒரு படி மேலே போய் திமுக ஆட்சியெ செந்தில் பாலாஜியால் பறிபோக போகிறது என்றும் கூறியுள்ளார். தன் சொந்த பிரச்சனையை திமுக பிரச்சனையாக செந்தில் பாலாஜி மாற்றி உள்ளார் என்றும் பாதி திமுக செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும் 70% அதிகாரிகள் செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் தான் உள்ளனர் என்றும் ஸ்டாலின் பதவி பறிபோனாலும் வியப்பதற்கு இல்லை என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva