சென்னையில் கலவரத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்

newyear
Last Updated: செவ்வாய், 1 ஜனவரி 2019 (10:18 IST)
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டும் வழக்கம் போல அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் கொண்டாடினர்.நேற்று இரவில் பெரும்பாலானோர் பட்டாசு வெடித்து சிறப்பாக தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மெரினா பீச்சிலும், பெசண்ட் நகர் பீச்சிலும் ஏராளமான மக்கள் கூடினார்கள் 
நேற்று இரவு சென்னை விஜிபி  பொழுதுபோக்கு  பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் உணவு வழங்காததால் இளைஞர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து துவம்சம் செய்துவிட்டனர்.
 
இளைஞர்கள் பொருட்களை அடித்து உடைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
இது சம்பந்தமாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தகல் வெளியாகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :