1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 ஜனவரி 2019 (07:22 IST)

கேரள அரசின் விருந்தினர் மாளிகை மீது கல்வீச்சு: சென்னையில் பதட்டம்

சபரிமலையில் நேற்று இரண்டு பெண்கள் தரிசனம் செய்ததால் ஐயப்ப பக்தர்களிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பதட்டம் காரணமாக தமிழக பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகை மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் விருந்தினர் மாளிகையின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. விருந்தினர் மாளிகையின் கண்ணாடிகளை கற்கள், கட்டைகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விருந்தினர் மாளிகையிலும் அதன் அருகில் உள்ள கட்டிடங்களிலும் உள்ள சிசிடிவி கேமரா காட்சியின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.