1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 2 ஜனவரி 2019 (12:09 IST)

சென்னை தியேட்டர்களில் கட்டணம் அதிரடியாக குறைப்பு! வெளிமாவட்டங்களில் குறைப்பு இல்லை

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக சென்னை தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நேற்று அதிரடியாக குறைக்கப்பட்டது. அதேநேரம் வெளியூர் திரையரங்குகளில் பழைய கட்டணமே  வசூலிக்கப்பட்டது. 


 
மத்திய அரசு சமீபத்தில்   சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்து அறிவித்தது.  இதன்படி 150 ரூபாய்  டிக்கெட் கட்டணத்துக்கு 28 சதவீத வரியில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.  இதனால் டிக்கெட் கட்டணம் 150இல் இருந்து 135 ஆக குறைக்கப்பட்டது. 100  ரூபாய் டிக்கெட் கட்டணத்துக்கு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் டிக்கெட் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 94  ஆக குறைக்கப்பட்டது.  80, 60, 50  என வசூலிக்கப்பட்ட கட்டணங்களில் 12 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.  ஆனால் வெளி மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தருணங்களில் சினிமா கட்டணத்தை குறைக்காமல் பழைய கட்டணத்தை வசூலித்து வருகிறார்கள். இதனால் ரசிகர்கள் தியேட்டர்களில் தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் விரைவில் தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.