வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 2 ஜனவரி 2019 (16:39 IST)

ஹலோ யாராச்சும் இருக்கீங்களா... திருடன் போலீஸ் ஆட்டத்தின் விளைவு

போலீஸாருக்கு பயந்து கிணற்றில் குதித்த திருடனை சுமார் 30 மணி நேரம் கழித்து அங்கிருந்த மக்கள் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை அம்பத்தூர் சந்திரசேகரபுரத்தில் இரவு நேரத்தில் சந்தேகம் படுமபடியாக சுற்றி திரிந்துள்ளார். அவனை பிடித்து விசாரிக்க போலீஸார் முயன்ற போது அவர் போலீஸாருக்கு பயந்து கிணற்றில் குத்தான். ஓடிவந்த போலீஸார் அவனை தேடியும் காணாததால் தப்பிவிட்டான் என நினைத்து சென்றனர். 
 
ஆனால், கிணறுக்குள் இருந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என ஓயாமல் குரல் கொடுத்துள்ளான். பின்னர், நான் கிணற்றுக்குள் இருக்கிறேன். தூர்வாருவதற்காக வந்தபோது விழுந்துவிட்டேன். என்னை தூக்கிவிடுங்கள் என உதவி கேட்டு கத்தியுள்ளான். மேலும் போலீஸுக்கு தகவல் கொடுக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளான். 
 
ஆனால், அங்கிருந்த ஊர் மக்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு துறையினரின் உதவியுடன் அவனை மீட்டனர். பின்னர்தான் அந்த நபர் ஒரு திருடன் என்றும் அவர் மீது பல கொள்ளை மற்றும் வழிபறி வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிய வந்தது.
 
பின்னர் 30 மணி நேரம் கிணர்றில் இருந்ததால் அவனுக்கு மருத்துவனமையில் சிகிச்சை அளிக்க கைது செய்து கூட்டி செல்லப்பட்டான்.