வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (18:10 IST)

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தென்ஆப்பிரிக்கா!

international court of Justice
காசாவின் மீது இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தென்னாப்பிரிக்க நாடு, இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல்  இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இடையில் நாட்கள் போர் நிறுத்தப்பட்டு மீண்டும் போர் தொடர்ந்து வருகிறது.

காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை அப்பாவி மக்கள், பெண்கள் குழந்தைகள், படைவீரர்கள் உள்ளிட்ட 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு பலரும் பாதிக்கப்பட்டு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், காசாவின் மீது இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தென்னாப்பிரிக்க நாடு வழக்கு தொடர்ந்துள்ளது. இன்று (ஜனவரி 11) தொடங்கி, இரு நாட்கள் விசாரணைக்கு வருகிறது.

தென்னாப்பிரிக்க நாட்டின் இந்த நடவடிக்கைக்கு வெனிசுலா, பிரேசில், மலேசியா, துருக்கி, ஜோர்டான் மாலதீவு, பாகிஸ்தான், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

இவ்வழக்கு பற்றி இந்தியா தனது நிலைப்பாட்டை இதுவரை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.