திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (22:43 IST)

கரூரில் நடுரோட்டில் டிராபிக் ஜாம் செய்யும் கட்டுமானப்பணி வாகனங்களால் பரபரப்பு.

karur
கரூர் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் டிராக்டர்கள் கொண்டு கட்டுமானப்பணிகள் ! நடுரோட்டில் டிராபிக் ஜாம் செய்யும் கட்டுமானப்பணி வாகனங்களால் பரபரப்பு.
 
கரூர் மாநகராட்சியில் அனுமதி வாங்காமல் ஏராளாமான கட்டுமானப்பணிகள் அரசியல் செல்வாக்குடன் நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் காலை, மதியம், மாலை என்று மூன்று வேலைகளிலும் கட்டுமானப்பணிகள் நடைபெறுகின்றது.

கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள தனியார் ஜவுளிக்கடை (தைலா சில்க்ஸ்), கட்டுமானப்பணி நடைபெற்று வரும் வேலையில் தீபாவளி சிறப்பு விற்பனிக்காக அந்த பணிகள் முடுக்கி விடப்பட்ட நிலையில், தற்போது விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் டிராக்டர்களை கொண்டு கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் பீக் ஹவர்ஸ் வேலையில் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் வேலையிலும், போக்குவரத்து அதிகம் நெரிசல் ஏற்படும் வேலையில் நடைபெறுவதால் டிராபிக் ஜாம் அதிகம் ஏற்படுகின்றன. இந்த டிராபிக் ஜாம் ஆல்,  பயணிகளும் அதிக அளவில் சிரமப்படுகின்றனர்.

Edited by Sinoj