1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (22:32 IST)

ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி கொழு உற்சவம் நிகழ்ச்சி

karur
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி கொழு உற்சவம் நிகழ்ச்சி – துர்க்கா பரமேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் .
 
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் என்றழைக்கப்படும் புகழ்ச்சோழர் மண்டபத்தில் ஆன்மீக பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்னிந்திய அளவிலும், தமிழக அளவிலும் மிகச்சிறந்த ஆன்மீக ஸ்தலமாகவும், சிவதலங்களுள் பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை புகழ்பெற்று விளங்கும் கரூர் ஆநிலையப்பர் என்றழைக்கப்படும் கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் வளாகத்தில் அமைந்துள்ள நூற்றக்கால் மண்டபம் எனறழைக்கப்படும் புகழ்ச்சோழர் மண்டபத்தில் நவராத்திரி கொழுவினை முன்னிட்டு துர்க்கா பரமேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு கொழு உற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியினை முன்னிட்டு ஏராளமானோர் பக்தர்கள் தரிசனம் செய்ததோடு, ஆன்மீக கச்சேரி நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது
 
Edited by Sinoj