புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஜூலை 2019 (16:48 IST)

ஒருநாள் அறிமுக சலுகை – புத்தம் புது ஓப்போ கே3 அதிரடி விலையில்!

ஓப்போ நிறுவனத்தின் புத்தம் புது மாடலான ஓப்போ கே3 அறிமுக சலுகையாக முதல்நாள் மட்டும் குறைந்த விலையில் மொபைலை விற்க இருக்கிறது.

ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் இந்தியாவில் மிகவும் பிரபலமானது ஓப்போ. இதன் கேமரா குவாலிட்டியும், கணக்கற்ற ஆப்சன்களும் இளைஞர்களை வெகுவாக கவரக்கூடியவை. இந்த ஓப்போ நிறுவனத்தின் புதிய மாடல் ஓப்போ கே3.

6.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்ட்ராகன் 710 பிராஸசர் கொண்டது. பின்பக்கம் 16 எம்.பி மற்றும் 2 எம்.பியில் இரண்டு கேமராக்களும். முன்பக்கம் செல்பி எடுக்க ட்ரிகர் மாடலில் 16 எம்.பி கேமராவும் உள்ளது. ஃபுல் ஹெச்.டி AMOLED டிஸ்ப்ளே உள்ளது. கைரேகை சென்சார் ஸ்க்ரீன் உள்ளது. இதனால் ஸ்க்ரீனில் கைவைத்தாலே அன்லாக் ஆகும்.

இந்த மாடல் 6 ஜி.பி ரேம் 64 போன் மெமரியிலும், 8 ஜி.பி ரேம் 128 ஜி.பி போன் மெமரியிலும் கிடைக்கிறது. இதன் முதல்நாள் விற்பனை வரும் ஜூலை 19 வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகிறது. அன்றைக்கு அமேசான் மூலம் மட்டுமே இந்த மொபைலை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

மொபைல் விரும்பிகளால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த மொபைலின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் 6 ஜி.பி ரேம் கொண்டது 16000 ரூபாய் முதல் 17000 ரூபாய் இருக்கலாம் எனவும், 8ஜி.பி ரேம் கொண்டது 21000 முதல் 22000 வரை இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.