வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2019 (10:24 IST)

போறவன் போகட்டும்... இருக்கறவன நல்லா கவனி: தினகரனின் புது ரூட்!!

தினகரன் கட்சியை விட்டு போறவன் போகட்டும், ஆனால் கட்சியை நம்பி இருப்பவர்களை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டுமென முடிவெடுத்துள்ளாராம். 
 
திமுக, அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக தேர்தலுக்குப் பிறகு தனது செல்வாக்கை இழந்து வருகிறது. 
 
ஏற்கனவே தங்களது முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோரை இழந்துள்ளது. இதனால் அமமுக அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியில் உள்ளது. 
இந்நிலையில் கட்சியை மீட்டெடுக்க தினகரன் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளாராம். அதாவது, இதற்கு பின்னர் அதிகபட்சமா இன்னும் 50 நபர்கள் கட்சியைவிட்டு வெளியேற கூடும். போறவங்க போனா போகட்டும் விட்டுருங்க. ஆனா, கட்சியை நம்பி இருக்கறவங்கள நல்லா கவனிச்சிகனும் என தெரிவித்துள்ளாராம். 
 
அதேபோல், கட்சியின் முக்கியப் பதவிகள் மற்றும் பொறுப்புகளை 50 வயதிற்குக் குறைந்த இளைஞர்களுக்குக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இது கட்சியை நீண்டகால பயணத்திற்கு உதவும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளாராம்.