1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (10:56 IST)

தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறையால் திமுக கூட்டணிக்கு சிக்கல்

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய விதிமுறை ஒன்றை வகுத்து உள்ளதால் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது 
 
ஒரு மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் 5% தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தனிச் சின்னம் கிடைக்கும் என்று புதிய விதிமுறை ஒன்றை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இதன்படி தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள நிலையில் அதில் குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு தனிச் சின்னம் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது 
 
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய விதிமுறையால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அரசியல் கட்சிகள் நீதிமன்றம் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது