செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2021 (09:06 IST)

கமல் கட்சியுடன் கூட்டணி: விஜய் பட தயாரிப்பாளர் அறிவிப்பு!

கமல் கட்சியுடன் கூட்டணி: விஜய் பட தயாரிப்பாளர் அறிவிப்பு!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெறும் என்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்த செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் கட்சி இல்லை என்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சின்ன சின்ன கட்சிகளை தன்னுடைய கூட்டணியில் இணைந்து வருகிறது. அந்த வகையில் விஜய் நடித்த புலி படத்தை தயாரித்த பிடி செல்வகுமார் தனது கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியில் இணைத்துள்ளார் 
 
இது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவரும் விஜய் நடித்த ’புலி’ உள்பட சில படங்களை தயாரித்தவருமான பிடி செல்வகுமார், நேற்று கமல்ஹாசனை சந்தித்ததாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணி சார்பில் பிடி செல்வகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.