புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2021 (18:07 IST)

பாஜக கூட்டணியில் அமமுக இணைகிறதா? எல்.முருகன் விளக்கம்!

அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் அமமுக கூட்டணியா என்ற கேள்விக்கு அதிரடி அக்கட்சியின் தமிழக தலைவர் எல் முருகன் அதிரடி பதில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுக கூட்டணியில் பாஜக சுமார் 30 தொகுதிகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அதிமுக மற்றும் அமமுக இணைப்பு முயற்சியையும் பாஜக மேலிடம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக அமமுக கூட்டணி இல்லையெனில் வாக்குகள் சிதறி திமுகவுக்கு சாதகமாகி விடும் என்பதால் இந்த ஏற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமமுகவுக்கும் சேர்த்து அதிக தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பெற்று அமமுகவை தங்களது கூட்டணியில் இணைக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் எல்முருகன் அவர்கள் பாஜக கூட்டணியில் அமமுகவை சேர்ப்பது குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என்றும் அமமுக தனித்து போட்டியிடும் என எங்குமே அறிவிக்கவில்லை என்றும் கூறினார்