வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2023 (15:37 IST)

அரசுப் பேருந்து ஓட்டுனரை அரிவாளால் தாக்கிய நபர்கள்

ambasamuthiram
அம்பாசமுத்திரம் அருகே வீரவ நல்லூரியில் அரசுப் பேருந்து ஓட்டுனரை அரிவாளரால் தாக்கிய நபர்கள் பற்றி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

அம்பாசமுத்திரம் அருகே வீரவ நல்லூரியில்  நேற்றிரவு கல்லிடைக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து  வெளியே வந்த ரசு பேருந்தை சிலர் வழிமறித்துள்ளனர்.

ஓட்டுனர் ரெஜின் சிறிது தூரம் தள்ளி பேருந்துஐ நிறுத்தியுள்ளர் என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த நபர்கள் ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றி, அவர்கள் ஓட்டுனர் ரெஜினை அரிவாளார் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பாபநாசம் பணமனை போக்குவரத்து  ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அப்போராட்டம் கைவிடப்பட்டது.