ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2023 (12:30 IST)

அனுமதியின்றி சிறப்புக் காட்சி… திருப்பூர் சுப்ரமண்யன் தியேட்டர்களுக்கு நோட்டீஸ்!

தமிழக அரசின் அரசாணைகளை மதிக்காத திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ்? இன்று ரிலீசாகும் சல்மான் கானின் டைகர் 3 படத்திற்கு 10 மணிக்கு முன்பாக 6 காலைக்காட்சிகள் திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

இது சம்மந்தமான டிக்கெட் புக்கிங் ஸ்கீர்ன் ஷாட்களை பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கண்டனங்களை தெரிவித்திருந்தனர். சம்மந்தப்பட்ட சக்தி சினிமாஸின் உரிமையாளர் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சக்தி சினிமாஸுக்கு விளக்கமளிக்க கோரி நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.