தொடர்புடைய செய்திகள்
- அன்வர் ராஜா எம்.பி மகன் மீது வழக்குப்பதிவு - போலீசார் நடவடிக்கை
- அன்வர் ராஜா எம்.பி மகன் மீது வழக்குப்பதிவு - போலீசார் நடவடிக்கை
- சென்னை சிட்டி சென்டரில் தீவிபத்து: அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்
- மணமகள் முன்னே..மணமகன் பின்னே ; களை கட்டிய சசிகலா புஷ்பா திருமணம் (வீடியோ)
- சென்னை ஐ.ஓ.பி வங்கியில் ரூ.32 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை
சென்னையில் தனக்கு வாங்கி வைத்திருந்த மதுவை குடித்ததால் பெற்ற தாயை கொன்ற மகன்
சென்னையில் தனக்கென வாங்கி வைத்திருந்த மதுவை தாய் குடித்ததால், பெற்ற மகனே தாயை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலாவதி(54). இவரது மகன் நீலகண்டன்(25). தாய் மகன் இருவருமே மதுக்கு அடிமையானவர்கள். இந்நிலையில் சம்பவத்தன்று கலாவதி, நீலகண்டன் வாங்கி வைத்திருந்த மதுவை குடித்துள்ளார்.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நீலகண்டன், தான் வாங்கி வைத்திருந்த மதுவை குடிக்க முற்பட்டார். அப்போது தான் வாங்கி வைத்திருந்த மது காணாததால் வீடு முழுவதுமாக மதுவை தேடியுள்ளார். பிறகு கலாவதி தனது மதுவை குடித்திருப்பதை அறிந்து ஆத்திரத்தில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நீலகண்டன், கலாவதியை கீழே தள்ளியுள்ளார். சுவரின் மீது கலாவதியின் தலை மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் கலாவதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நீலகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மது பிரச்சனையால் பெற்ற மகனே தாயை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
