ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (12:09 IST)

4 குழந்தைகளை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்ற தந்தை!

பாகிஸ்தானில் தந்தை ஒருவர் தனது 4 குழந்தைகளையும் கோடாரியால் துடிக்க துடிக்க வெட்டிக் கொன்ற சம்பவம் அங்கு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காம்பி மேரா கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது அய்யூப், அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரு வீட்டில் வாழந்து வருகிறார்.
 
இவரது மனைவி வீட்டிலிருந்து வேலைக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த அய்யூப் தனது 4 குழந்தைகளையும் கோடாரியால் துடிக்க துடிக்க கொடூரமாக வெட்டினார். இதனால் அந்த 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு கொடூரமான அவருக்கு தூக்கு தண்டனை வாங்கி தருமாறு அங்கிருக்கும் மக்கள் போலீசாரை கேட்டுக் கொண்டனர்