திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2024 (18:21 IST)

சென்னை கந்தகோட்டம் முருகன் கோவில் சிறப்புகள்

Lord Murugan
சென்னை கந்தகோட்டம் முருகன் கோயில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். இது பாரிமுனை பகுதியில்,  அமைந்துள்ளது.
 
இந்தக் கோயில் மிகவும் பழமையானது என்று கூறப்படுகிறது. மூலவர் கந்தசுவாமி, உற்சவர் முத்துக்குமாரர். அம்மன் வள்ளி, தெய்வானை. தலவிருட்சம் மகிழம், தீர்த்தம் சரவணப் பொய்கை ஆகியவை இந்த கோவிலில் அமைந்துள்ளது.
 
 கோயிலின் உள்ளே மூலவர், உற்சவர், அம்மன் சன்னதிகள் உள்ளன. மேலும், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி, சித்திபுத்தி விநாயகர், சரவணப் பொய்கை, பஞ்சபூத தீர்த்தம், சப்தகன்னிகள் சன்னதிகள் உள்ளன.
 
இந்தக் கோயில் தை மாதம் 18-ஆம் நாள் பிரதான திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும், கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம் போன்ற விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
 
Edited by Mahendran