வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (17:03 IST)

மின்னகத்தில் புகார் வந்தால் உடனே சரி செய்யப்படும்- அமைச்சர் செந்தில் பாலாஜி

Senthil Balaji
மின்னகத்தில் புகார் தெரிவித்தால், உடனுக்குடன் சரி செய்யப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

‘’வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய  பகுதிகளில் மிக கனமழை, கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், ‘’அனைத்து நிறுவனங்களும் ஆயத்த  நிலையில் இருக்க வேண்டும். பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் ஸ்டாலின்  உத்தரவிட்டிருந்தார்.

 
சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், மக்கள் செல்லும் இடங்களில் நீர் தேங்கியுள்ளதது.

ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை எச்சரித்துள்ளதால்,  மழையின் போது மரங்கள் விழுந்து மின் சாரம் தடைபட்டது. இதை மா நாகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் சரி செய்தனர்.

இந்த  நிலையில், மின் சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,  தமிழகத்தில் மின் வி  நியோகம் பாதிப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில்  பகலில் 1440 பேர் பணியாற்றுவதாகவும், இரவில் 600 பேர் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும், மின்னகத்தில் புகார் தெரிவித்தால், உடனுக்குடன் சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj