வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (19:48 IST)

நயன்தாரா -விக்னேஷ் சிவன் மீது போலீசில் புகார்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்  ஒருவர் புகார் அளித்துளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன் தாரா. இவருக்கும் இவரது காதலர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம்  திருமணம் நடந்தது.

அதன்பின்னர்,  நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இருமுறை தேனிலவுக்காக வெளிநாடு சென்றனர். இவர்கள் திருமணத்தின் போது,  எடுக்கப்பட்ட வீடியோ பல கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

தற்போதும் விக்னேஷ் சிவன், அஜித்குமாரின் அஜித்62 படத்தை இயக்குவதில் பிஸிஸாக உள்ளார். இந்த நிலையில்  திருமணமாகி 4 மாதங்களில் இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக இருவரும் தெரிவித்தனர்.

இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தையைப்பெற்றெடுக்க அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படு வருகிறது.

இந்த  நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர், இளைஞர் சமூதாயத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதால் இவர்கள் மீது  தம்பதியர் மீது   நடடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில்  வழக்கறிஞர்  ஒருவர் புகார் அளித்துளார்.

Edited by Sinoj