புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2024 (14:58 IST)

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

seeman

தமிழக அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைப்பது குறித்த கேள்விக்கு சீமான் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் அரசு கொண்டு வரும் பல திட்டங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டு வருகிறது. இதை சமீபத்தில் விமர்சித்து பேசியிருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல், உதவாத திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைத்து கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவதாக விமர்சித்திருந்தார்.

 

அவரது விமர்சனத்தை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தும் பேசியிருந்தனர்.
 

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ”அதிகாரம் என்பது நிலையானது அல்ல. இலங்கையிலும், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் அதிகாரத்தில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என பார்த்து வருகிறோம்.

 

அண்டை மாநிலமான ஆந்திராவில் கூட ஜெகன்மோகன் ரெட்டி அரசின் அனைத்து திட்டங்களுக்கும் தனது தந்தை ராஜசேகர் ரெட்டி பெயரை வைத்தார். ஆனால் என்ன நடந்தது? சந்திரபாபு நாயுடு டெல்லி சென்றிருந்தபோதே இங்கே ராஜசேகர் ரெட்டியின் சிலைகள் உடைத்து தூர்க்கப்பட்டன. அந்த நிலை தமிழகத்திலும் நடைபெறலாம். தமிழ் மகன் ஒருவன் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் அனைத்தும் பொட்டலாகி விடும்” என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K