வந்தால் வெள்ளம்; இல்லாவிட்டால் தண்ணீர் தட்டுப்பாடு - ஜெ.வை எதிர்த்து போட்டியிடும் வசந்தி தேவி


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 11 மே 2016 (11:41 IST)
சென்னை ஆர்.கே.நகரில் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து, மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக-தமாகா அணியின் பொது வேட்பாளர் வசந்தி தேவி போட்டியிடுகிறார். அவர், அந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
 
 
அப்போது பொதுமக்களிடம் பேசிய வசந்தி தேவி, ”இந்தத் தொகுதியில் மிகுந்த தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. வெள்ளம் வந்த போது அதிக தண்ணீர் வீணாகி கடலுக்குள் சென்றது. அதை சேமித்து வைத்திருந்தால் இப்போது குடீநீர் பிரச்சனையே இருக்காது.
 
வந்தால் வெள்ளம் வருகிறது. இல்லையென்றால், பொதுமக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இங்குள்ள மக்களுக்கு சுத்தமான குடீநீர் கிடைப்பது இல்லை. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் குடீநீர் விநியோகிக்கப்படுகிறது.
 
அந்தக் குடீநீரும் கழிவுநீர் கலந்து வருகிறது. தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா ஆட்சிக்கு வந்தால் மழை நீரை சேகரிக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்போம். இங்குள்ள மக்களுக்கு சுத்தமான குடீநீர் வசதி செய்துதர முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....


இதில் மேலும் படிக்கவும் :