ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2020 (12:14 IST)

இட ஒதுக்கீடு பற்றி உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும்! – இந்திய மருத்துவ கவுன்சில் பதில்!

மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்க கோரி தமிழக அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தில் முறையிட்டன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளித்துள்ளது.

அதன்படி ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும் என்றும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பின் தொடரப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என தமிழக அரசியல் கட்சிகள் எதிர்பார்த்திருக்கின்றன.